வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: லோக்சபாவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய அரசு எஸ்டேட் இயக்குநரகம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
மேற்கு வங்க திரிணமுல் காங்கிரசை சேர்ந்தவர், மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதியின் எம்.பி.,யாக இருந்தார். இவர், பார்லிமென்டில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது குறித்து, பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து, தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்ததை அடுத்து மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்வதாக லோக்சபா செயலர் அறிவித்தார்.
இந்நிலையில் புதுடில்லியில் அரசு வீட்டை காலிசெய்ய கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் லோக்சபா செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து மஹுவா மொய்த்ராவுக்கு அரசு எஸ்டேட் இயக்குநரகம் கடந்த 7,மற்றும்12 ம் தேதிகளில் இரண்டு நோட்டீஸ்கள் அனுப்பியது. நோட்டீசை ரத்து செய்ய கோரி டில்லி ஐகேர்ட்டில் மஹூவா மொய்த்ரா தாக்கல் செய்தார். மனுவில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அரசு வீட்டை காலி செய்ய அவகாசம் கோரினார். மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் பிரசாத், மஹூவா மொய்த்ரா கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement