India has benefited immensely from PM Modi: Antony Blinken praises | பிரதமர் மோடியால் இந்தியா பெரிய பலன் அடைந்துள்ளது: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ” பிரதமர் மோடியால் இந்தியாவும், நட்பு நாடுகளும் பெரிய பலன் அடைந்துள்ளன” என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் பாராட்டி உள்ளார்.

இது குறித்து ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது: இந்தியாவை அபரிமிதமான வெற்றி பெற்ற நாடாக அமெரிக்கா கருதுகிறது. மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.

பல இந்தியர்களின் வாழ்வில் நேர்மறையாக தாக்கத்தை உண்டாக்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரின் முயற்சியால் அமெரிக்கா- இந்தியா உறவு நெருக்கமாகி உள்ளது.

அதிபர் ஜோ பைடன் பதவிகாலத்தில் வெளியுறவு கொள்கையில் அடிப்படை உரிமைகள் சார்ந்தும், ஜனநாயகம் சார்ந்தும் கவனம் செலுத்த அமெரிக்கா விரும்பியது. அதன் படியே செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடியால் இந்தியாவும், நட்பு நாடுகளும் பெரிய பலன் அடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.