பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு, மலம்புழா பூங்காவில் வரும் 23ம் தேதி மலர் கண்காட்சி துவங்குகிறது.
கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா பூங்கா. இங்கு, ஆண்டுதோறும் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் மற்றும் மலம்புழா நீர்ப்பாசனத் துறை இணைந்து, மலர்கண்காட்சி நடத்துகிறது.
நடப்பாண்டு மலர் கண்காட்சி, வரும் 23ம் தேதி துவங்குகிறது. இதற்காக, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்ச் உள்ளிட்ட வண்ணத்தில், ஆப்ரிக்கன் பிரெஞ்ச் செண்டு மல்லி பூக்கள், பல்வேறு வண்ணங்களைக் கொண்ட ‘பெட்டூனியா’, சிவப்பு மற்றும் ஊதா மற்றும் தங்க ‘சால்வியா’ பூக்கள், நட்சத்திரம் போல் ஜொலிக்கும் ‘ஆஸ்டர்’ பூக்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இலைகளை காண முடியாதபடி பூக்கும் ‘விங்க்’ பூக்கள், ‘ஸெலோசியா’ பூக்கள், சூரியகாந்தி, பல்வேறு வகையான ரோஜாக்கள் என, 35க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பூக்கள் மலர் கண்காட்சியை ஒட்டி பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 200 தொழிலாளிகள் பூக்களை பராமரித்து வருகின்றனர். மலர் கண்காட்சியை ஒட்டி உணவு கண்காட்சி மற்றும் கலாசார நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
காலை 8:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கண்காட்சியானது, வரும் 28ம் தேதி நிறைவுபெறுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement