இஸ்லாமாபாத், நம் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், 37, நம் அண்டை நாடான, பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்குக்கும், 41, கடந்த 2012ல், தெலுங்கானா மாநிலம் ைஹதராபாதில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது.
இத்தம்பதிக்கு, 6 வயதில் மகன் உள்ளார். சோயிப் மாலிக் – சானியா மிர்சா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்வதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் அடிபட்டன.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை சனா ஜாவேத்தை, சோயிப் மாலிக் காதலித்து வருவதாக செய்திகள் அடிபட்டன.
இந்நிலையில், நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டதாக, சோயிப் மாலிக் சமூக வலைதளத்தில் நேற்று அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ைஹதராபாதில் வசிக்கும் சானியா மிர்சா குடும்பத்தினர் கூறுகையில், ‘இஸ்லாமில், கணவருடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பமில்லாவிட்டால், அவரை பிரிந்து வாழ்வதற்கு, மனைவிக்கு உரிமை உள்ளது.
‘இது, ‘குலா’ என, அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், சானியா மிர்சா, சோயிப் மாலிக்கிடமிருந்து ஏற்கனவே பிரிந்து விட்டார்’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement