Indian plane crash in Afghanistan?: Center denies | ஆப்கானிஸ்தானில் இந்திய விமானம் விபத்தா?: மத்திய அரசு மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம், இந்திய விமானம் கிடையாது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் இருந்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்ஷான் மாகாணத்தின் சிபக் மாவட்டத்தில் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரத்தில் விபத்தில் சிக்கியது இந்திய விமானம் என தகவல் பரவியது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ளது. அது, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் என மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.