வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி, மஹாராஷ்டிரா அரசு அறிவித்த பொது விடுமுறையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ”பொதுநல வழக்கு அல்ல: விளம்பர வழக்கு” என தெரிவித்தனர்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை(ஜன.,22) கோலாகலமாக நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநில அரசு நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளன. மஹா., அரசு அறிவித்த பொது விடுமுறையை எதிர்த்து, 4 சட்ட கல்லூரி மாணவர்கள், பொதுநல வழக்கு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று(ஜன.,21) நீதிபதிகள், ஜி.எஸ். குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் விசாரித்தனர்.
விளம்பர வழக்கு
அப்போது நீதிபதிகள், ” விடுமுறைகள் குறித்த முடிவுகள் மாநிலங்களின் அதிகார எல்லைக்கு உட்பட்டவை. மத சார்பின்மைக்கு ஒத்து போகும் வகையில் வழிபாடு குறித்த விடுமுறைகளை மாநிலங்கள் அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த மனுவில் அவ்வாறு மாநிலம் செயல்படவில்லை என காட்ட மனுதாரர்கள் தவறி விட்டனர்.
இந்த மனு, அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், விளம்பர மோகத்தாலும் தூண்டப்பட்டதாக தெரிகிறது. இது பொதுநல வழக்கல்ல. பொது விளம்பர வழக்கு என தெரிவித்தனர். இதையடுத்து, மனுவை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement