IND vs ENG: இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி… விராட் கோலி திடீர் விலகல் – என்ன காரணம்?

IND vs ENG, Virat Kohli: இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (IND vs ENG Test Series) இரு அணிகளும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விளையாட உள்ளது. வரும் ஜன.25ஆம் தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்கும் நிலையில், வரும் மார்ச் மாதம் முதல் வாரம் வரை இந்த தொடர் நடைபெறும். 

விராட் கோலி விலகல்

இரு அணிகளும் தங்களின் 16 பேர் கொண்ட டெஸ்ட் அணியை அறிவித்தன. முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட தொடங்கி உள்ள நிலையில், தற்போது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியானது.

விராட் கோலி (Virat Kohli Withdrawn) அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா (Jay Shah) இன்று வெளியிட்ட அறிவிப்பில், “இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) விராட் கோலி கோரியிருந்தார். 

தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும்…

கேப்டன் ரோஹித் ஷர்மா (Rohit Sharma), அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஆகியோரிடம் பேசிய விராட் கோலி, நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே தனது முதன்மையானதாக இருக்கும் அதே வேளையில், சில தனிப்பட்ட சூழ்நிலைகள் அவரது இருப்பையும், அவரின் கவனத்தையும் கோருகின்றன என்றும் வலியுறுத்தினார். பிசிசிஐ (BCCI) அவரது முடிவை மதிக்கிறது. வாரியமும், அணி நிர்வாகமும் நட்சத்திர பேட்டருக்கு தனது ஆதரவை வழங்குகிறது. டெஸ்ட் தொடரில் மெச்சத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி, மீதமுள்ள அணி உறுப்பினர்களின் திறன்களில் நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த நேரத்தில் விராட் கோலியின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அவரது தனிப்பட்ட காரணங்களின் தன்மை குறித்து ஊகங்களைத் தவிர்க்குமாறும் ஊடகங்களையும் ரசிகர்களையும் பிசிசிஐ கேட்டுக்கொள்கிறது. இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆடவர் அணிக்கான தேர்வுக் குழு விரைவில் மாற்று வீரரை நியமிக்கும்” என குறிப்பிட்டுள்ளார். 

The BCCI requested media and fans to respect Virat Kohli’s privacy and refrain from speculating on his personal reasons.

– Take care and come back soon, King Kohli…!!! pic.twitter.com/eKRLXySUlL

— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 22, 2024

ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம்

சில நாள்கள் முன்னர் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி விளையாடவில்லை. குறிப்பாக, கடந்த நவம்பர் 19ஆம் தேதி, ஓடிஐ உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டுமே பங்கேற்றார். சுமார் ஒரு மாதம் எந்த போட்டிகளிலும் அவர் விளையாடாமல் இருந்தார்.

மேலும், 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் டி20 அணியிலும் விராட் கோலி என்ட்ரி கொடுத்த நிலையில், பலரும் அவர் மீது எதிர்பார்ப்பில் இருந்தனர். டெஸ்ட் போட்டி என்றாலே அதில் விராட் கோலியின் எனர்ஜி வேற லெவலில் இருக்கும் என்பதால் அவரின் ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், தற்போது விராட் கோலியின் அறிவிப்பு சற்று ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.