திஷ்பூர் : வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், அசாம் அரசு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இன்று அனைத்து வகையான அசைவ உணவுகள் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில் முதல்வர் சர்மா கூறியிருப்பதாவது:
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மாநிலம் முழுதும் மாலை 4:00 மணி வரை அசைவ உணவுகளை விற்பனை செய்யகூடாது என்று உணவகங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 500 ஆண்டுக்கு பின், இந்த தருணம் நமக்கு வாய்த்துள்ளது. நம் வாழ்வில் இதுபோன்ற தருணம் மீண்டும் வாய்க்காது. எனவே இதை மறக்க முடியாத நாளாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement