அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பூஜை செய்து வழிபாடு செய்தனர். இதனிடையே அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்து நெகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக திரை பிரபலங்கள், விளையாட்டுத் துறை பிரபலங்கள் எனப் பலரும் பா.ஜ.க அரசுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஷால் தனது X வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், “அன்புக்குரிய மாண்புமிகு பிரதமர் மோடியின் மற்றொரு சாதனை இது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஜெய் ஸ்ரீராம். ராமர் கோயில் இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும்.
Congrats dearest honourable prime minister Modi Saab on another great achievement and another feather in your cap, Jai Shri Ram.
Ram mandir will be remembered for years and generations to come and a tribute to all those who laid their lives and sacrificed themselves for this…
— Vishal (@VishalKOfficial) January 22, 2024
இந்தத் தருணத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவருக்கும் தலைமுறை தலைமுறைகளாக இங்கு வந்து, அஞ்சலி செலுத்துவார்கள்” என்று மோடியை வாழ்த்திப் பதிவிட்டிருக்கிறார்.