Chinese Spy Ship Approaches Maldives In New Worry For India | மாலத்தீவை நோக்கி நகரும் சீன உளவு கப்பல்: இந்தியாவிற்கு புது தலைவலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: சீன உளவு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளதாகவும், அது மாலத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறி வரும் சீனா, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிற்கு பல வகைகளில் அழுத்தம் கொடுத்து வரும் சீனா, தற்போது மாலத்தீவு அரசுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. சமீபத்தில் இந்தியா – மாலத்தீவு இடையிலான உறவு விரிசலடைந்ததை பயன்படுத்தி மாலத்தீவுடன் நெருக்கம் காட்டுகிறது சீனா.

இது, இந்தியாவுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது. மாலத்தீவு – சீன அரசுகளுக்கு இடையே 20க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் சமீபத்தில் கையெழுத்தாகின. இந்த நிலையில், ‘சியாங் யாங் ஹாங் 03’ என்ற சீன உளவு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளதாகவும், அது மாலத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தொடர் அழுத்தம் காரணமாகவே தங்கள் கடற்கரையில் நுழைய வெளிநாட்டு கப்பல்களுக்கு இலங்கை கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது. ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், இலங்கைக்கு செல்லவிருந்த சீன உளவு கப்பல், மாலத்தீவை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.