Elon Musk Calls For UNSC Changes: India Not Having Permanent Seat Absurd | ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடமில்லாதது அபத்தம்: எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: ‛‛ உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு, ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர இடமில்லாதது அபத்தமானது” என டெஸ்லா மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் கூறியுள்ளார்.

ஐ.நா., பாதுகாப்புச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‛‛ பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்ரிக்காவுக்கு இன்னும் ஒரு நிரந்தர உறுப்பினர் இல்லை என்பதை நாம் எப்படி ஏற்க முடியும். சர்வதேச அமைப்புகள், இன்றைய உலகத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் இருக்கக்கூடாது.

செப்டம்பர் மாதம் நடக்க உள்ள ஐ.நா., உச்சி மாநாடானது, உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களை பரிசீலிப்பது மற்றும் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும்” எனக்கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஐ.நா., அமைப்புகளை சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஆனால், அதில் உள்ள பிரச்னை என்னவென்றால், அதிக அதிகாரம் வைத்துள்ளவர்கள், அதனை விட்டு தர விரும்பவில்லை. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது. ஆப்ரிக்காவுக்கும் நிரந்தரம் இடம் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் எலான் மஸ்க் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.