பீஜிங், நம் அண்டை நாடான சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தின் யுசுய் மாவட்டத்தில் உள்ள சின்யு நகரின் தெருவில் இன்டர்நெட் மையங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளன.
நேற்று பிற்பகலில் இங்குள்ள கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தன. இந்த தீ விபத்தில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒன்பது பேர் காயம் அடைந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement