வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: உக்ரைன் தெற்கு பகுதியில் ரஷ்ய ராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 74 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் எல்லையில் உள்ள மேற்கு பெல்கோராட் என்ற இடத்தில் ரஷ்யாவின் ஐ.எல்.76 விமானம் விபத்துக்குள்ளானது. கைதிகள் பரிமாற்றத்துக்காக 65 உக்ரைன் கைதிகளை ஏற்றிச் சென்றபோது விமானம் விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் 65 போர்க் கைதிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உள்பட 74 பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் விழுந்து நொறுங்கிய போது, 74 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானம் விபத்துக்குள்ளான போது எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதும், வலது இறக்கையில் முதலில் தீப்பற்றியது. இதையடுத்து விமானம் முழுவதும் தீ பற்றி எரிகிறது.
போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பார்லிமென்ட் சபாநாயகர் குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement