பணம் கொடுத்து பட்டம் வாங்கினேனா? : பிக் பாஸ் அர்ச்சனா கோபம்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 7வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. ஒவ்வொரு முறையும் 'பிக் பாஸ்' டைட்டில் வென்றவர்கள் குறித்து விமர்சனம் வருவது வழக்கம். இந்த முறை கமல் மீதே விமர்சனம் வந்தது. தனது படத்தில் நடித்த நடிகைகளுக்கு அவர் ஆதரவாக இருந்தார் என்று கூறப்பட்டது. நிகழ்ச்சிக்கு பிறகு 'பிக் பாஸ்' பட்டம் வென்ற அர்ச்சனா மீது விமர்சனம் எழுந்தது. அவர் பலருக்கு பணம் கொடுத்து டீம் ஒர்க் மூலம் தனக்கு வாக்களிக்க வைத்ததாக அந்த குற்றச்சாட்டு இருந்தது. அதாவது பணம் கொடுத்துதான் பட்டம் வென்றார் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து இதுவரை மவுனமாக இருந்த அர்ச்சனா, இப்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது “பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்காக எனக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு கொடுத்திருக்கிறார்கள். அதேசமயத்தில் நான் பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றேன் என சலசலப்பும் வந்திருக்கிறது. எனக்கு 19 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். ஒரு ஓட்டுக்கு 1 ரூபாய் என்று வைத்தால் கூட 19 கோடி வரும். இவ்வளவு பணத்திற்கு நான் எங்கு போவேன்? இவ்வளவு ரூபாய் செலவு செய்து பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை வாங்குவதற்கு பதிலாக 1 கோடி ரூபாய் வைத்து ஒரு படத்தை இயக்கி நான் ஹீரோயினாக நடித்து விடுவேன். அதனால், இதெல்லாம் சுத்தப் பொய். நான் மக்கள் ஆதரவில்தான் ஜெயித்தேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.