வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் பிலிப் தீவில் கடலில் மூழ்கி 4 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
ஆஸி.,யின் விக்டோரியா மாகாணத்தில் பிலிப் என்ற தீவின் கடற்கரை உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத இந்த கடற்கரையில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் மற்றும் 40 வயதான பெண் ஆகியோர் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் திடீரென கடலில் மூழ்கினர். இதனையடுத்து, போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் 3 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. அவர்களின் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது. 43 வயதான பெண் ஆஸி.,க்கு விடுமுறையை கழிக்க வந்ததாகவும், மற்ற 3 பேரும் மெல்போர்னில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement