வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்திய குடியரசு தின விழாவில், பிரான்ஸ் நாட்டு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். இந்த அணிவகுப்பில் பிரான்ஸ் நாட்டு வீரர்களின் அணிவகுப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது.
பிரான்ஸ் நாட்டு ராணுவத்தில் இருந்து 85 பேர் கொண்ட அணிவகுப்பு குழுவும், 33 பேர் கொண்ட இசைக்குழுவும் அணிவகுப்பில் பங்கேற்றனர். இசைக்குழுவுக்கு கேப்டன் குர்தா தலைமை தாங்கினார். அணிவகுப்பு குழுவுக்கு கேப்டன் நோயல் தலைமை தாங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement