பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து கப்பலில் சிக்கியுள்ள 22 இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய போர்க்கப்பல் ஈடுபட்டுள்ளது. பாலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலையை இஸ்ரேல் தொடர்ந்து வருவதை அடுத்து பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹவுதி தீவிரவாதிகள் செங்கடல் வழியாக இஸ்ரேலை கடந்து செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடரும் இந்த தாக்குதலை அடுத்து ஏடன் வளைகுடா பகுதியில் பதற்றம் நீடித்து […]
