Land for work bribe: Court summons to Rabri Devi, Misabharti | வேலைக்கு நிலம் லஞ்சம் : ராப்ரி தேவி, மிசாபார்திக்கு கோர்ட் சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: வேலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்னள் பீஹார் முதல்வர் லாலு பிரசாத் மனைவி ராப்ரி, மகள் மிசாபார்தி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2004 – -2009ல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்து பீஹாரைச் சேர்ந்த சிலருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தர லாலு குடும்பத்தினர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து கடந்தாண்டு லாலு பிரசாத் யாதவ், மனைவி ராப்ரி தேவி , மகள் மிசா பார்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் முதல்வராக இருந்த ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி மற்றும் சிலர் மீது அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று நடந்த விசாரணையில் இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால், ராப்ரிதேவி, மிசாபார்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி பிப்.07-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.