டீலருக்கு வந்த 2024 பஜாஜ் பல்சர் N150 படங்கள் வெளியானது

பஜாஜ் ஆட்டோ தனது பல்சர் வரிசை பைக்குகளில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டதாக மேம்படுத்த துவங்கியுள்ள நிலையில் 2024 பல்சர் N150 மாடல் டீலர்களுக்கு வந்துள்ள படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெற்று மிக நேரத்தியான  மெட்டாலிக் வெள்ளை மற்றும் கருப்பு என இரு நிறங்களை பெற உள்ள பஜாஜ் பல்சர் என்150 பைக்கில் தொடர்ந்து 149cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 14.5hp பவர் மற்றும் 13.5Nm டார்க் வெளிப்படுத்தும் இதில் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் பெறுகிறது.

முந்தைய மாடலை விட மேம்பட்ட பாடி கிராபிக்ஸ் கொண்டுள்ள புதிய பல்சர் N150 மாடலின் இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆனது கொடுக்கப்பட்டு முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறுகின்றது. இந்த கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உட்பட பெட்ரோல் இருப்பு,  மைலேஜ் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

இரு பிரிவுகளை கொண்ட பெரிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் ரன்னிங் எல்இடி பைலட் விளக்குகள், எல்இடி டெயில் லைட் உள்ளன. ஆனால் டர்ன் இண்டிகேட்டர் தொடர்ந்து ஹாலெஜன் பல்புகளை பெறுகின்றது. ஒற்றை இருக்கை அமைப்பினை தொடர்ந்து பெற்று முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் உள்ளது.

தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட சற்று விலை கூடுதலாக புதிய பஜாஜ் பல்சர் N150 விலை ரூ.1.22 லட்சத்தில் வரக்கூடும் என எதிர்பார்க்கலாம். பல்சர் என்160 மாடலும் இதுபோன்ற மேம்பாட்டை பெற உள்ளது.

pulsar n150

image source – mrauto_insta yt

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.