Rs 23 crore property for cat and dog: Old woman generous | பூனை, நாய்க்கு ரூ.23 கோடி சொத்து: மூதாட்டி தாராளம்

பீஜிங்: சீனாவில் ஷாங்காய்நகரில் வசிப்பவர் மூதாட்டி லியூ. தனக்கு சொந்தமான ரூ.23 கோடி சொத்துகளை 3 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கும் வகையில் உயில் எழுதி வைத்தார்.

ஆனாலும் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது பிள்ளைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சி, வேதனையை ஏற்படுத்தியது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தன் உயிலை மாற்றி எழுதி சொத்துகள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய், பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.

இதையறிந்த அவரது பிள்ளைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் இதுபோன்ற செயல்களுக்கு அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பதால், கால்நடை மருத்துவமனையை துவக்கி நாய், பூனையை நன்றாக பராமரிக்கும்படி, விலங்குகள் நல அமைப்பிடம் தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதற்கு பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சீனாவில் வளர்ப்பு பிராணிகள் மீது சொத்து எழுதி வைக்க அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.