கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில், அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம். தல சிறப்பு இத்தலத்தில் ஒரே கருவறையில் மூன்று அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பொது தகவல் பிராகாரத்தில் முத்து முனி, செம்முனி, ஜடாமுனி, லாடமுனி, கருமுனி, வீரமாமுனி, வாழுமுனி ஆகிய காவல் தெய்வங்களும் அருளுகின்றனர். பிரார்த்தனை சகோதர உறவு மேம்பட, மூன்று அம்பிகையருக்கும் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். சுகப் பிரசவம் ஆவதற்கும், பிரசவத்திற்கு பின் தாயும் சேயும் நலமாக இருப்பதற்கும் காத்தாயி அம்பாளை வழிபடுகிறார்கள். நேர்த்திக்கடன் அம்மனுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். தலபெருமை […]
