
காதல் படங்கள் : மிருணாள் தாக்கூர் ஏக்கம்
சீதா ராமம் படம் மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருகிறார். அவர் கூறுகையில், ‛‛காதல் படங்களை பார்த்து தான் வளர்ந்தோம். ஆனால் அப்படியான படங்கள் திடீரென நின்றுவிட்டன. காதல் பிடிக்கவில்லை என கூறிவிட்டு சிலர் காதல் படங்களை ரகசியமாக பார்க்கிறார்கள். சீதா ராமம், ஹாய் நான்னா போன்ற காதல் படங்களில் நடித்தது மகிழ்ச்சி. ஹிந்தியிலும் காதல் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். குறிப்பாக ஷாரூக்கான் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். ஏனோ அதுமாதிரியான வாய்ப்புகள் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை அதுபோன்ற கதைகளில் நடிக்கும் அளவுக்கு நான் பிரபலமாகவில்லையா என தெரியவில்லை. இதற்குமேல் என் நடிப்பு திறமையை ஹிந்தி இயக்குனர்களிடம் எப்படி வெளிப்படுத்துவது என தெரியவில்லை. அதில் நான் சோர்வடைந்துவிட்டேன்'' என்றார்.