சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து ஈரான் மீன்பிடி படகை மீட்ட இந்திய போர்க்கப்பல்

புதுடெல்லி: சோமாலிய கடற்கொள்ளையர் களிடம் இருந்து ஈரான் மீன்பிடி படகை இந்திய போர்க்கப்பல் பத்திரமாக மீட்டது.

இஸ்ரேல்-ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வழங்கி வருகின்றன. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் மறைமுகமாக ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது.

ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஏமனை சேர்ந்த ஹவுதி தீவிரவாதிகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் சரக்கு கப்பல்கள், போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹவுதி தீவிரவாதிகள் மட்டுமன்றி, சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்களும் சரக்கு கப்பல்களை சிறைபிடித்து வருகின்றனர். ஹவுதி தீவிரவாதிகள், சோமாலிய கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த இந்திய கடற்படையின் 10 போர்க்கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் சுற்றி வருகின்றன.

கடந்த சில வாரங்களில் மட்டும் பல்வேறு சர்வதேச சரக்குகப்பல்களை இந்திய போர்க்கப்பல்கள் பத்திரமாக மீட்டன. இதன் காரணமாக சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து வருகிறது.

இந்த சூழலில் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து ஈரான் மீன்பிடி படகை இந்திய போர்க்கப்பல் பத்திரமாக மீட்டு உள்ளது. இதுகுறித்து இந்திய கடற்படை சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய மீன் பிடி படகை சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர். அந்த மீன்பிடி படகில்இருந்த 17 மீனவர்களை பிணைக்கைதியாக்கி சோமாலிய எல்லைப்பகுதிக்கு படகை செலுத்தினர்.

இதுதொடர்பான தகவல்இந்திய கடற்படையின் ஐஎன்எஸ்சுமித்ரா போர்க்கப்பலுக்கு கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இந்தியபோர்க்கப்பல், சோமாலிய கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தது. ஈரான் மீன்பிடி படகு,17 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.