புவனேஸ்வர் காங்கிரஸ் தலைவர் கார்கே பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை அரசியல் கோழை என ஜாடையாக விமர்சித்துள்ளார். நிதிஷ்குமார் தலைமையில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. நிதிஷ்குமார் பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை அமைத்து பிறகு அதில் இருந்து விலகி, பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்வராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்வர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும் 6 பேர் கேபினட் […]
