வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் பர்டூ பல்கலையில் படித்து வந்த இந்திய மாணவர் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், அவர் மர்மமான முறையில் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலையில், இந்தியாவைச் சேர்ந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர், கணினி அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் படிப்பு படித்து வந்தார். இவரை கடந்த 28 ம் தேதி முதல் காணவில்லை என தாயார் சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம், நீல் ஆச்சார்யாவை கண்டுபிடிக்க பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் உள்ளோம் என தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், நீல் ஆச்சார்யா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை கணினி அறிவியல் துறைத்தலைவர் உறுதிப்படுத்தி உள்ளார். அலிசான் சாலை லபாய்ட் பகுதியில் நீல் ஆச்சார்யா உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement