மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – ஐகோர்ட் கேள்வி

மதுரை: “மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியிலுள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், விதிமீறல் கட்டிடங்கள், நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் 2011-ல் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்களின் உயரத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்துறை கடந்த 30.1.1997-ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி கோயிலைச் … Read more

“கூட்டணி தர்மத்தை சமாஜ்வாதி பின்பற்றவில்லை” – உ.பி காங்கிரஸ் பொறுப்பாளர் குற்றச்சாட்டு

லக்னோ: சமாஜ்வாதி கட்சி கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லை என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சமாஜ்வாதி கட்சி கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லை. கூட்டணி விஷயத்தில் சமாஜ்வாதி கட்சி தன்னிச்சையாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சமாஜ்வாதி கட்சி நேற்று வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொகுதிகளில் பல தொகுதிகள் காங்கிரஸ் கட்சி கேட்ககக் கூடியவை. சமாஜ்வாதி கட்சியின் செயல் மிகவும் ஆபத்தானது. சமாஜ்வாதி கட்சி … Read more

ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்தது குறித்து காங்கிரஸ் விளக்கம்

டில்லி ராகுல் காந்தி சென்ற காரில் திடீரென பிரேக் போட்டதால் கண்ணாடி உடைந்ததாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நாகாலாந்து, ராகுல் காந்தியின் யாத்திரை அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாகத் தொடர்ந்து வருகிறது. நேற்று மேற்கு வங்கத்தின் மால்டா பகுதி அருகே சென்றபோது ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்தது. ராகுல் காந்தியின் கார் மீது சிலர் கல்லெறிந்ததாக … Read more

அமலாக்கத்துறைக்கு எதிராக.. ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை.. பரபரக்கும் ஜார்கண்ட்

ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் இன்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அமலாக்கத்துறையின் சம்மன்களுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த ரிட் மனு நாளை (வியாழக்கிழமை) ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன். மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் இந்த மாநிலத்தில் Source Link

எனது படங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாது: விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடித்த முதல் திரைப்படம் 'வெண்ணிலா கபடி குழு' படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இது குறித்து விஷ்ணு விஷால் நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' வெளிவந்து பதினைந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது. என் திரைப்பயணம் முழுக்க ஒரு ரோலர்கோஸ்டர் போல பரபரப்பாகவும், இனிமையாகவும் அமைந்ததில், நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது திரை வாழ்க்கைக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்த, என் இயக்குநர் சுசீந்திரன் … Read more

\"ஹார்ட் பீட்\" சீரிஸின் தீம் பாடல் வெளியானது!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது. சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், ‘ஹார்ட் பீட்’ சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ‘ஹார்ட் பீட்’

ஈரோடு: டாஸ்மாக்கில் கலப்பட மது விற்பனையா? – பகிரப்படும் வீடியோ… அதிகாரிகள் சொல்வதென்ன?

தமிழ்நாடு அரசு விற்பனைக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதையொட்டிய பார்களில் இரவு 10 மணி தொடங்கி பிற்பகல் 12 மணி வரை சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாகவும் பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்திய இருவர் … Read more

“பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா?” – அண்ணாமலை சவால்

திருப்பத்தூர்: “பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. பிரதமர் மோடி தலைமையில் 75 அமைச்சர்கள் உள்ளனர். இதில், ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா?” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று மேற்கொண்டார். திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலை அருகே வந்த அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். அதன் பிறகு, அங்கிருந்து 2 கி.மீ., தொலைவுக்கு அவர் … Read more

டெல்லி – ராஞ்சி 1,300 கி.மீ பயணம்: 21 மணி நேரமாக அமலாக்கத் துறையிடம் ஹேமந்த் சோரன் ‘அகப்படாதது’ எப்படி?

புதுடெல்லி: ‘ஹேமந்த் சோரன் எங்கே…’ – அமலாக்கத் துறை மட்டுமல்ல, கிட்டத்தட்ட 48 மணி நேரங்களாக தேசிய ஊடகங்களில் தலைப்புச் செய்தி இதுவே. அத்துடன் வலைதளங்களில் மீம்ஸ்களாகவும் இந்த வாசகங்கள் வலம்வர, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒரேநாளில் ட்ரெண்டிங்கின் உச்சத்தை அடைந்தார். சம்பவம் இதுதான். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். ஹேமந்த்திடம் விசாரிப்பதற்காக 8 முறை சம்மன் அனுப்பியது … Read more

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை சில வாரங்கள் இயக்க அனுமதிக்க முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை  கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெளியூர்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் அங்கிருந்தே கிளம்ப வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மனுவில், ”அரசின் இந்த உத்தரவால் பயணிகள் மட்டுமின்றி, ஆம்னி பஸ் நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க … Read more