ஷங்கர் மீது ராம்சரண் ரசிகர்கள் கோபம்

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். தெலுங்கில் முதல் முறையாக ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்க 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ராம் சரணின் 15வது படம் என இப்படம் பற்றி அறிவிக்கப்பட்டது. அந்த வருடத்தின் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகி கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் இப்படத்திற்கு 'கேம் சேஞ்சர்' என்ற தலைப்பு … Read more

அந்த வயதை கடந்துவிட்டேன்.. அந்த ஃபீலிங்கே வரல.. ஆண்ட்ரியா சொன்னதை கேட்டு ஷாக்கான பேன்ஸ்!

சென்னை: தமிழ்சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா எனக்கு பாட்டு பாடமட்டுமில்ல நடிக்கவும் வரும் என்பதை பல படங்களில் நடித்து நிரூபித்துள்ளார். தற்போது இவர், பிசாசு 2 , நோ என்ட்ரி, கா, மாளிகை என வரிசையாக படங்களை கையில் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார். அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

“மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தீர்ப்பு இது…” – மார்க்சிஸ்ட் கருத்து @ பழநி கோயில் வழக்கு

சென்னை: “மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மக்களிடம் பகைமை உணர்வை விதைக்கும் வகையிலான உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசியல் நோக்கத்துக்காக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் தன்னை அறியாமல் நீதிமன்றமும் துணை போயிருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பழநி முருகன் கோயிலுக்குள் இதர மதத்தினரை அனுமதிக்கக் கூடாது … Read more

‘தேர்தல் உரை’ போலவே குடியரசுத் தலைவரின் நாடாளுமன்ற உரை: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் நாடாளுமன்ற உரை, ‘தேர்தல் உரை’யைப் போன்று இருந்ததாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவரின் உரையுடன் இன்று தொடங்கியது. இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தில் நிகழ்த்துவதற்கான உரை, தேர்தல் உரையைப் போல் இருக்குமாறு தயாரித்து அளித்திருக்கிறார்கள். அதைத்தான் அவர் வாசித்திருக்கிறார். ஆட்சியாளர்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அவையெல்லாம் குடியரசுத் … Read more

5 ஆம் முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 ஆம் முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி  உள்ளது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சமயத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மன் சட்டவிரோதமானது அமலாக்கத்துறை சம்மனைத் திரும்பப்பெற வேண்டும் … Read more

Coast Guard Day | கடலோர காவல்படை தினம்

இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில் கப்பல்படைக்கு உதவும் விதமாக 1977 பிப். 1ல் கடலோர காவல்படை உருவாக்கப்பட்டது. கப்பல்படையுடன் இணைந்து செயல்படுகிறது. இதன் தலைமையகம் டில்லி. இது தவிர மும்பை, சென்னை, கோல்கட்டா, போர்ட் பிளேர், காந்திநகரில் மண்டல தலைமையகங்கள் உள்ளன. கப்பல், ரோந்து படகு, போர் விமானங்கள் இப்படையிடம் உள்ளன. 20 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். கடலோர காவல் படையினரின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக பிப். 1ல் கடலோர காவல்படை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்திய … Read more

100 கோடி கிளப்பில் இணைந்த 'பைட்டர்'

ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர், கரண் சிங் நடித்த ஹிந்தி படம் 'பைட்டர்'. சித்தார்த் ஆனந்த் இயக்கினார். சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கடந்த 25ம் தேதி குடியரசு தினத்தையொட்டி வெளியானது. படம் வெளியான முதல் இரண்டு நாளிலேயே 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. நேற்றைய நிலவரப்படி படம் 150 கோடி வசூலித்தது. மொத்த வசூல் 500 கோடியை தாண்டும் என்கிறார்கள். ஓடிடி உரிமம் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக … Read more

Imran gets 14 years in jail in another corruption case | மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 14 ஆண்டு சிறை

இஸ்லாமாபாத், கருவூல மோசடி வழக்கில் ஏற்கனவே சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில், நேற்று முன்தினம் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கருவூல மோசடி தொடர்பான மற்றொரு வழக்கில் அவருக்கும், அவருடைய மனைவிக்கும், தலா 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 2018 — 2022 வரை பிரதமராக இருந்தவர், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் … Read more

Santhanam Salary: அடுத்தடுத்து ஃபிளாப்.. ஆனாலும், சம்பளத்தை குறைக்காத சந்தானம்.. இத்தனை கோடியா?

சென்னை: ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான அறை எண் 305-ல் கடவுள் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் சந்தானம். அதுவரை காமெடியனாக நடித்து வந்தவர், அந்த படத்திற்கு பிறகும் சில படங்களில் காமெடியனாக நடித்தார். 2013-ல் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் மீண்டும் லீடு ரோலில் நடிக்க ஆரம்பித்த அவர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,

“காங்கிரஸை தீண்டத்தகாத கட்சியாக நினைக்கிறது திமுக!” – புதுச்சேரி அதிமுக தாக்கு

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தில் பேசிய எம்.பி வைத்திலிங்கம், “பா.ஜ.க-வும், என்.ஆர்.காங்கிரஸாரும் அ.தி.மு.க-வை எதிர்க்கிறார்களா அல்லது அவர்களின் `பி’ டீமாக செயல்படுகிறார்களா என்று தெரியவில்லை. புதுச்சேரி அ.தி.மு.க-வை பொறுத்தவரை, முதல்வர் ரங்கசாமி கைகாட்டுபவர்களைத்தான் வேட்பாளர்களாக நிறுத்துகின்றனர். அ.தி.மு.க-வுக்கு போடும் வாக்கு என்பது, உண்மையில் பா.ஜ.க-வுக்கு போடும் வாக்குகள். `இந்தியா’ கூட்டணி உடைந்துவிட்டது என்று கூறும் அ.தி.மு.க-தான் சிதறிக் கிடக்கிறது. `இந்தியா கூட்டணி… கட்சியின் சின்னத்திற்கும், கொடிக்கும் அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்” … Read more