வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லாகூர்: இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம் குறித்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ராவுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. பிரதமர் ஆக இருந்த போது கிடைத்த பரிசு பொருட்களை கருவூலத்தில் ஒப்படைக்காமல் விற்று மோசடி செய்த வழக்கில், அவருக்கும், மனைவி புஷ்ராவுக்கும் 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இம்ரான் கான் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், புஷ்ராவின் முதல் கணவர் கவார் மனேகா நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இம்ரான் கானும், புஷ்ராவும் என்னை ஏமாற்றிவிட்டனர். திருமண வாழ்க்கையை இருவரும் சீரழித்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுமணத்திற்கான கட்டாய காத்திருப்பு காலம் என்ற இஸ்லாமிய நடைமுறை மீறப்பட்டுள்ளது எனவும் கூறியிருந்தார்.
அடியாலா சிறையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீண்ட நேர விசாரணைக்கு பிறகு இம்ரான் கான், புஷ்ரா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டதாக அறிவித்த நீதிபதி இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement