வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜபல்பூர்: ம.பி., மாநிலம் ஜபல்பூர் பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மது போதையில் நிதான மில்லாமல் இருக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
ம.பி., மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உள்ள ஜமுனியா என்ற பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ராஜேந்திரநேதம் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கு வந்த ஆசிரியர் மது போதை காரணமாக நிதானமில்லாமல் பள்ளிபடிக்கட்டில் விழுந்து கிடந்தார்.
இச்சம்பவம் குறித்து கிராமமக்கள் கூறுகையில், ஆசிரியரின் இந்த நிலை குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றனர். இதனிடையே பள்ளி ஆசிரியரின் நிதானம் இல்லாத நிலையை பள்ளி மாணவர்கள் ஒரு சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இது சமூக வலை தளங்களில் வைரலானது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளது.
ஆசிரியர் மது அருந்தி பள்ளிக்கு வருவது இது முதல் முறையல்ல. அடிக்கடி இவ்வாறு நடைபெறுகிறது. என மாணவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement