டில்லி மத்திய அமைச்சர் மேக்வால் பொது சிவில் சட்டம் சட்ட ஆணைய பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பொதுச் சிவில் சட்டம் திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் பரம்பரை சட்டங்கள் ஆகியவற்றில் மாநிலத்தில், எந்தவித மதவேற்றுமையும் இன்றி அனைத்து குடிமக்களுக்கும் சீரான ஒரு சட்ட வடிவம் கிடைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு இந்த சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. போர்த்துகீசிய ஆட்சி காலத்தில் இருந்து கோவாவில் பொது சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது., […]
