British King Charles III cancer? | பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸூக்கு புற்றுநோய் பாதிப்பு ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன்: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோய்க்கு சிகிச்சைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின் முறைப்படி மன்னர் மூன்றாம் சார்லஸாக முடிசூட்டிக்கொண்டார்.

இவர் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அறுவை சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில் இன்று வெளியான தகவலில், மன்னர் மூன்றாம் சார்லசிற்கு முழு உடற் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளதும், தெரியவந்துள்ளது. தற்போது அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பக்கிங்ஹாம் அரண்மணை வட்டாரங்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.