Famous Hollywood actor Carl Weathers passed away | பிரபல ஹாலிவுட் நடிகர் காரல் வெதர்ஸ் காலமானார்

வாஷிங்டன்: முன்னணி ஹாலிவுட் நடிகர்களுடன் நடித்த பிரபல ஹாலிட் நடிகர் காரல் வெதர்ஸ்,76 காலமனார்.

80 களில் ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் நடிப்பில் வெளியான ‛‛ராக்கி” சீரியல்களில் சக நண்பனராகவும், அர்னால்டு ஸ்வாஷ்நேக்கர் நடிப்பில் சூப்பர் ஹிட் திரைப்படமான ‛தி பிரிடேட்டர்’ படத்தில் சக ராணுவ கமாண்டராகவும் நடித்து புகழ்பெற்ற காரல் வெதர்ஸ், டி.வி. சீரயல்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 1-ம் தேதியன்று தன் வீட்டில் தூக்கத்திலிருந்து போது உயிர்பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த காரல் வெதர்சிற்கு முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.