இந்தியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து அணி இந்தியா வந்திருக்கிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்த இரண்டாவது போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை தோற்கடித்து 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த இரண்டாவது போட்டியில் கில் சதம் அடித்திருந்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய சுப்மன் கில், “ குல்தீப் வீசிய ஓவரில் ஒரு கேட்ச் பிடித்தேன். அப்போது அந்த பந்து என் கையில் பட்டு இரத்தம் வந்தது. எனக்கு வலி இருந்ததால் பேட்டிங் செய்வதற்காக வலி நிவாரண ஊசியை போட்டுக் கொண்டு வந்து பேட்டிங் செய்தேன். கடந்த சில போட்டிகளில் நான் சரியாக விளையாடவில்லை.
இதனால் எனக்கு நெருக்கடி இருந்தது. இருப்பினும் நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. நான் நானாக இருந்து விளையாட வேண்டும் என்று களத்தில் நின்றேன். நான் 104 ரன்களில் ஆட்டமிழந்து திரும்பியதும் அப்பா எனக்கு போன் செய்து வெறும் 104 ரன்களுக்கு அவுட்டாகிவிட்டாய் என்று என்னைத் திட்டினார்.

உண்மைதான் அப்பா தவற விட்டு விட்டேன் என்று கூறினேன். இந்திய அணிக்காக விளையாடுவது எனக்குக் கிடைத்த பரிசு. நான் சரியாக விளையாடாமல் இருந்து விமர்சனங்கள் ஏதேனும் வந்தால் அதை நான் கண்டுகொள்ள மாட்டேன் ” என்று தெரிவித்திருக்கிறார்.