பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.10000 அபராதம் விதித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது, ஒப்பந்ததாரராக இருந்த சந்தோஷ் பாட்டீல் என்பவர் உடுப்பியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் உயிரிழந்தார். முன்னாள் ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த கே. எஸ். ஈஸ்வரப்பாவுக்கும் இவரது மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது. அவரை கைது செய்ய வலியுறுத்தி அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையின் இல்லத்தை நோக்கி சட்டவிரோதமாகப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் தற்போதைய முதல்வர் சித்தராமையா, உள்கட்டமைப்பு […]
