ஹர்தா, மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 11 பேர் உடல் கருகி பலியாகினர்; 59 பேர் காயம் அடைந்தனர்.
ம.பி.,யின் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலையில், நேற்று காலை ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து ஊழியர்களை காப்பாற்றினர்.
தகவல் அறிந்து போபால் மற்றும் இந்துார் பகுதிகளில் இருந்து ஏராளமான தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும் தீயில் சிக்கி 11 பேர் உடல் கருகி பலியாகினர்; 59 பேர் காயம் அடைந்தனர்.
பட்டாசு ஆலையை சுற்றியுள்ள பகுதி கட்டடங்களும் இடிந்ததால், மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement