Man Falls Out Of Truck At Hong Kong Airport, Dies After Being Hit By Plane | விமானம் மோதி ஊழியர் பலி: ஹாங்காங்கில் அரிய சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஹாங்காங்: ஹாங்காங்கில் விமான நிலைய ஊழியர் ஒருவர், வாகனத்தில் செல்லும் போது தவறி விழுந்து, விமானத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த அரிய நிகழ்வு ஹாங்காங்கில் நடந்துள்ளது. உயிரிழந்த நபர், ஜோர்டான் நாட்டை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு 34 வயது ஆவதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் பெயர் வெளியிடப்படவில்லை.

சீன விமான சேவையில், பராமரிப்பு மற்றும் கடைநிலை ஊழியராக அவர் பணியாற்றியுள்ளார். சம்பவத்தன்று, ஹாங்காக் விமான நிலையத்தில் இழுவை வாகனம் ஒன்றில் பயணித்துள்ளார். விமான ஓடுபாதையில் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது, அந்த வழியாக இழுத்து வரப்பட்ட விமானம் அவர் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த அந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக, அவர் பயணித்த டிரக்கின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வாகனத்தில் பயணித்த போது, சீட் பெல்ட்டை சரியாக அணியவில்லை என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.