வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் 5 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண் ஒருவர், தாயின் நகைச்சுவையை கேட்டு சிரித்த நிகழ்வு அமெரிக்காவில் அரங்கேறியது தற்போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் ப்ளூவெலன். இவருக்கு 11 வயதில் மகன் உள்ளார். இவர் 2017 செப்., மாதம் நடந்த கார் விபத்தில் கோமா நிலைக்கு சென்றார். டாக்டர்கள் சிகிச்சை அளித்த போதும் அவர் நினைவு திரும்பவில்லை. இதனையடுத்து ஜெனிபரை அவரது தாயார் பெக்கி மீன்ஸ், பலரின் உதவியுடன் கவனித்து வந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு ஆக., மாதம் பெக்கி மீன்ஸ் நகைச்சுவை ஒன்றை கூறியுள்ளார். இதனை கேட்ட ஜெனிபர் ப்ளூவெலன், கண்ணை திறந்து சிரித்துள்ளார். இதனால், இன்ப அதிர்ச்சிக்குள்ளான பெக்கி மீன்ஸ், டாக்டர்களிடம் டாக்டர்களை வரவழைத்து சிகிச்சை அளித்துள்ளார்.
இருப்பினும் ஜெனிபர் கண் திறந்தாலும் முழுமையாக குணமடையவில்லை. அவரை பேச வைப்பதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அவரது மகன் ஜூலியன் கால்பந்து விளையாடுவதையும் டிவி மூலம் ஜெனிபர் பார்த்து வருகிறார். இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement