புதுடில்லி:மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தோழியை ஒரு வாரம் பாலியல் பலாத்காரம் செய்து, சூடான பருப்பை ஊற்றி சித்திரவதை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பரஸ், 28. புதுடில்லியில் ஒரு ஹோட்டலில் சமையல்காரர். இவருக்கு சமூக வலைதளம் வாயிலாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் நகரைச் சேர்ந்த இளம்பெண் அறிமுகம் ஆனார்.
கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேல் சமூக வலைதளத்தில் இருவரும் நண்பர்களாக இருந்தனர். கடந்த இரு மாதங்களுக்கு முன், அந்தப் பெண்ணுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் வேலை கிடைத்தது.
அதற்கான ரயிலில் புறப்பட்ட அந்தப் பெண், செல்லும் வழியில் புதுடில்லியில் இறங்கி, நண்பர் பரஸை சந்திக்க முடிவு செய்தார்.
டில்லியில் பரஸை சந்தித்தபோது, தன்னுடனேயே டில்லியில் தங்குமாறும், இங்கேயே வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும் பரஸ் உறுதியளித்தார். அதை ஏற்றுக் கொண்ட அந்தப் பெண், புதுடில்லி நெப்சராய் ராஜு பூங்கா அருகே வாடகை வீட்டில் கடந்த ஒரு மாதமாக பரஸுடன் தங்கி இருந்தார்.
முதலில் சில நாட்கள் இருவரும் ஆனந்தமாக இருந்தனர். நாட்கள் செல்லச் செல்ல, பரஸ் தன் சுயரூபத்தை காட்டியுள்ளார். தினமும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சூடான பருப்பை தோழி மீது கொட்டி, அவள் துடிப்பதை ரசித்துள்ளார்.
கடந்த ஜனவரி 30ம் தேதி மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்தார். அவளுடைய கடும் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார், அந்தப் பெண்ணை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த பெண்ணின் உடலில் 20 இடங்களில் காயங்கள் இருந்தன. கைது செய்யப்பட்ட பரஸிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
லிப்ட் கேட்ட பெண்ணுக்கு
நேர்ந்த கொடூரம்
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் மசூரியில் உள்ள அழகு நிலையத்துக்கு வெளியே ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த அங்கூர் சவுத்ரி, 38, என்பவர், தன் வண்டியில் ‘லிப்ட்’ கொடுத்து ஏற்றிச் சென்றார். ஆனால், அந்தப் பெண் கூறிய இடத்துக்குச் செல்லாமல், தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்த சவுத்ரி, அவரிடம் இருந்து தங்கக் கம்மல் மற்றும் மொபைல் போனையும் பறித்துக் கொண்டார்.
இதுகுறித்து, அந்தப் பெண் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த மசூரி போலீசார், அங்கூர் சவுத்ரியை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்