Kejriwal, who refused 5 times enforcement department summons: Court ordered to appear on Feb 17 | 5 முறை அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால்: பிப்., 17ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் பிப்., 17ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டில்லி அரசின் 2021- 2022ம் நிதியாண்டின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தன.

புறக்கணிப்பு

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, 5 முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் விசராணைக்கு ஆஜர் ஆகாமல் கெஜ்ரிவால் புறக்கணித்து விட்டார்.

உத்தரவு

இந்நிலையில், ‛‛ ஐந்து முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் விசாரணைக்கு வரவில்லை என அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் பிப்., 17ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.