வாஷிங்டன்: கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயன்றாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, அந்நாட்டு முன்னாள் அதிபர் டிரம்ப்பிற்கு சட்டப்பாதுகாப்பு வழங்க முடியாது என்று அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயன்றதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை டிரம்ப் மறுத்தார். முன்னாள் ஜனாதிபதியான தனக்கு, இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி டிரம்ப் தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து டிரம்ப் தொடர்ந்த வழக்கை விசாரித்த கொலம்பியா மாவட்ட முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில், ‛‛ அதிபர் பதவியில் இருந்தவர்களின் செயல்பாடுகள் சட்ட நடவடிக்கைகளில் இருந்து விதிவிலக்குக்கு உட்பட்டவை. எனினும், அத்தகைய விதிவிலக்குகளை டிரம்ப் செயல்பாடுகளின் குற்றவியல் தன்மை மிஞ்சுவதாக உள்ளது. அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக விசாரிக்கப்படுவதில் இருந்து அவருக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கமுடியாது‛‛ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement