வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது ராஜ்யசபாவில் பிரதமர் மோடி அளித்த பதிலுரைக்கு மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிரண் ரிஜிஜூ மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். அவை:
மத்திய அமைச்சர் எல். முருகன்
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை முன்னேற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் நாங்கள் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என தொலைநோக்கு பார்வை உடன் பிரதமர் மோடி நாட்டை வழி நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட ஒரு பிரதமர் நமக்கு கிடைத்ததற்கு பெருமிதம் கொள்கிறேன்.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து, ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்தார்கள். ஆங்கிலேயர்களின் வழியை பின்பற்றினார்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்.
தேர்தல் பேச்சு
இது குறித்து காங்கிரஸ் எம்.பி., ராஜீவ் சுக்லா கூறுகையில், “முழு பேச்சும் காங்கிரசை குறித்து தான் இருந்தது. மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பேச வாய்ப்பு தரவில்லை என்றார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில், “இது பார்லிமென்டின் கடைசி கூட்டத்தொடர். பார்லிமென்டில் தேர்தல் குறித்து பேசி, மோடி பிரதமர் பதவியை தரம் தாழ்த்துகிறார். பிரதமர் மோடி எங்களை தாக்கி பேசுவதால், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement