கபுர்தலா:பஞ்சாப் மாநிலத்தில் தெரு நாய்கள் சுற்றிவளைத்துக் கடித்துக்குதறியதில் இளம்பெண் உயிரிழந்தார்.
பஞ்சாபின், கபுர்தலா மாவட்டம் பஸ்ஸன் காதிம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரி தேவி, 32. நேற்று முன் தினம், மாடு மேய்க்க சுல்தான்பூர் லோதி வயலுக்குச் சென்றார்.
செல்லும் வழியில் தேவியை சுற்றி வளைத்த, 20 தெருநாய்கள், அவரை கடித்துக் குதறின. அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரது கணவர் தேடி வந்த போது, மனைவி இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதே கிராமத்தில் மற்றொரு பெண்ணையும் தெருநாய்கள் கடித்துக் குதறின. அந்தப் பெண் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, விசாரணை நடத்திய துணை கலெக்டர் அமித் குமார் பஞ்சால், ”தெருநாய்களை உடனடியாக பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த பாரி தேவி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும்,” என்றார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement