பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் பாபு மோகன் (71). 1998-ல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து பின்னர் தொழிலாளர் துறை அமைச்சராக உயர்ந்தார். பின்னர் டிஆர்எஸ் கட்சியில் சேர்ந்து 2014-ல் மீண்டும் எம்எல்ஏவானார். அதன்பிறகு அங்கிருந்து விலகி, 2018-ல் பாஜகவில் இணைந்தார்.
தற்போது நடிகர் பாபுமோகன், பாஜகவிலிருந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.