டில்லி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார் பீகாரை ஆட்சி செய்த மெகா கூட்டணியை விட்டு விலகி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார்,பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். இந்த புதிய கூட்டணி அரசு அமைந்த நிலையில் அவர் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். இன்று பிரதமர் நேரம் ஒதுக்கியதையடுத்து, டில்லியில் பிரதமர் மோடியை, நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார். பாஜகவுடன் […]
