3 Seconds Only ‛Review: Chinese Woman Earning Rs.120 Crores Weekly | 3 நொடி… ரூ.120 கோடி…: ‛‛ரிவ்யூ செய்து ‛‛காசு பார்க்கும் சீனப்பெண்

பீஜிங்: சீனாவில் சமூக வலைதளங்களில் ஒரு பொருளை 3 நொடிகள் மட்டுமே ‛ரிவ்யூ’ செய்து வாரத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.120 கோடி வருமானம் ஈட்டுகிறார் சீனப்பெண்.

சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு, அதன் பயனாளர்கள் பல்வேறு வகைகளில் வருமானம் ஈட்டி வருகின்றனர். அதனையே தொழில் ஆகவும் மாற்றி உள்ளனர். அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாரந்தோறும் ரூ.120 கோடி சம்பாதிக்கிறார்.

சீனாவைச் சேர்ந்தவர் ஜெங் ஷியாங் ஷியாங். இவர், சீனாவின் ‛ டூயின்’ சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலம் ஆனவர். அவரை 50 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இதில், அவர் பல்வேறு பொருட்களை பற்றி விளம்பரப்படுத்துகிறார். ஒரு பொருளை பற்றி, மற்றவர்களை போல் கதை அளப்பது கிடையாது. 3 நொடிகளிலேயே அதனை பற்றி கூறிவிடுகிறார்.

ஜெங் ஷியாங் ஷியாங் வீடியோவில் தோன்றியதும், அவரிடம் வேலை செய்பவர்கள், பெட்டியில் வைத்து விளம்பரப்படுத்த வேண்டிய பொருளை தள்ளி விடுகிறார். அதனை எடுத்து, வீடியோவில் காண்பிக்கும் ஜெங் ஷியாங் ஷியாங், விலையை மட்டும் கூறிவிட்டு மீண்டும் தள்ளிவிடுகிறார்.

அடுத்த நொடி அடுத்த பொருள் வருகிறது. இவ்வாறு மாறி மாறி குறுகிய நேரத்தில் 10 பொருட்களை பற்றி ‛ரிவ்யூ’ செய்கிறார். அந்த வகையில் ஜெங் ஷியாங் ஷியாங்கிற்கு வாரந்தோறும் 14 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.120 கோடி) வருமானம் கிடைக்கிறது. இவரின் தனித்துவமான நுட்பம் பலரையும் கவர்ந்துள்ளது. இதன் மூலம் தான் ‛ரிவ்யூ’ செய்யும் பொருட்களும் அதிகம் விற்பனையாவதாக ஜென் ஷியாங் ஷியாங் கூறுகிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.