வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 10 ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில் பல்வேறு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கருப்பு அறிக்கை வெளியிட்டார்.
காங்கிரஸ் தலைமையிலான 2014ம் ஆண்டுக்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.,வின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்துள்ளாக அந்த அறிக்கையில் வெளியிட்டார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளார். அதன் மீது விவாதம் நடைபெற்ற பின், ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
கருப்பு அறிக்கை
இந்நிலையில், காங்கிரஸ் தரப்பில் கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. பொருளாதாரம் பின்னோக்கி சென்றுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் பாகுபாடு காட்டுகிறது. பெண்கள் பாதி்கப்பட்டுள்ளனர். சிறுபான்மை மக்கள் அநீதி இழைக்கப்படுகிறது. உள்ளிட்ட விஷயங்கள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement