RBI leaves repo rate unchanged for sixth straight occassions | தொடர்ந்து 6வது முறையாக ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அது 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது. இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன் உயராது. தொடர்ந்து 6வது முறையாக ரெபோ வட்டி விகிதங்கள் உயர்த்தப்படவில்லை.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த அந்த வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. அது 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது. 2024ல் உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகம் பலவீனமாக இருந்தாலும் அது மீட்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. பணவீக்கம் இலக்கை நெருங்கி வருகிறது. எதிர்பார்த்ததை விட வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ரெப்போ விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.