டெல்லி: அரசு வேலைக்கு லஞ்சமாக நிலத்தை பெற்ற வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி மற்றும் 2 மகள்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தர விட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது ரயில்வேதுறை அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயில் பணி வழங்க பணத்துக்கு பதிலாக பயனர்களின் நிலங்களை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கனவே மாட்டுத்தீவனம் உள்பட பல்வேறு வழக்குகளில் குற்றச்சாட்டப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு […]
