சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பயனாக கல்லூரி மாணவ, மாணவியர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருவது மனநிறைவு அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ‘மனநிறைவு தரும் செய்தி. இந்த வெற்றிப் பயணம் தொடரும். தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது திராவிட மாடல் அரசின் நோக்கம். நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மனநிறைவு தரும் செய்தி!
இந்த வெற்றிப் பயணம் தொடரும்…
தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது #DravidianModel-இன் நோக்கம்! நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்!https://t.co/FKvU1Z8uMN pic.twitter.com/RRGaf25POH
— M.K.Stalin (@mkstalin) February 9, 2024
நான்கு மாவட்டங்களில் இருந்து கலை – அறிவியல் கல்லூரிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ள செய்தியைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார்.