வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் மனைவி ராப்ரிதேவி மற்றும் அவரது மகள்கள் 2 பேருக்கு கோர்ட் ஜாமின் வழங்கி உள்ளது.
2004 முதல் 2009 வரையிலான மத்திய ஆட்சியில் லாலு, ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். இந்நேரத்தில் புதிய பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் வேலைக்கு லஞ்சமாக நிலம் கைமாறியது. மேலும் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததும் கண்டறியப்பட்டது. இதில் லாலு, அவரது மனைவி ராப்ரி மகள்கள் மிசா, ஹேமா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது. 4,751 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு இறுதி விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த வழக்கில் டில்லி கோர்ட்டில் ராப்ரிதேவி, மகள்கள் மிசா, ஹேமா சார்பில் ஜாமின் கோரப்பட்டது. 3 பேருக்கும் வரும் பிப்-28 வரை இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement